MARC காட்சி

Back
திருவேற்காடு கருமாரியம்மன் கோயில்
245 : _ _ |a திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் -
246 : _ _ |a வேற்காடு, வெள்வேலங்காடு
520 : _ _ |a திருவேற்காட்டில் கருமாரி அம்மன் காட்சியளித்தார். முதன் முதலில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு குடமுழுக்கும் நடைபெற்றது. அன்னை கருமாரி திருச்சாம்பலால் வழிபடுவோரின் வினைபோக்கி அருளாட்சி செய்து வருகிறாள். வேற்கண்ணி அம்மை சூரர்களை மாய்ப்பதற்கு முருகப் பெருமானுக்கு வேல் கொடுத்த சக்தி இவள் என்பது புராணம். “க“ என்பது பிரம்மனையும், “ரு“ என்பது ருத்திரனையும், “மா“ என்பது மாலையும் குறிக்கும். முத்தேவர்களின் மூலசக்தி ஈவளே என்பது கருத்து. பஞ்சபூதங்களும் அன்னையை வழிபட்டு வேண்டிக் கொண்டதற்கு இணங்க அப்பஞ்ச பூதங்களை ஐந்து நாகங்களாகத் தன் முடி மேல் கொண்டு கொண்டு திருவருள் பாலித்தவள் கருமாரி.
653 : _ _ |a கோயில், சக்தி வழிபாடு, அம்மன், திருவேற்காடு, கருமாரி, வேலாயுத தீர்த்தம், வேற்காடு, வேலங்காடு, நவக்கிரக நாயகி, சென்னை, திருவள்ளூர்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
902 : _ _ |a 044-26800880, 26800430
905 : _ _ |a கி.பி.19-ஆம் நூற்றாண்டு
909 : _ _ |a 3
910 : _ _ |a தேவாரப் பாடல் பெற்ற தலம். திருஞானசம்பந்தர் இத்தலத்தைப் பாடியுள்ளார்.
914 : _ _ |a 13.07196425
915 : _ _ |a 80.12402058
916 : _ _ |a தேவி கருமாரி அம்மன்
917 : _ _ |a தேவி கருமாரியம்மன்
918 : _ _ |a கருமாரி அம்மன்
922 : _ _ |a கருவேல மரம், வேம்பு
923 : _ _ |a வேலாயுத தீர்த்தம்
924 : _ _ |a காமிகம்
925 : _ _ |a ஆறு கால பூசை
926 : _ _ |a சித்ரா பௌர்ணமி, ஆடித் திருவிழா (12 வாரங்கள்), பிரம்மோற்சவம், தைப்பூசம், மாசிமகம்
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையில் அம்மை பிறைச்சந்திரன், மூவிலைச்சூலம், உடுக்கை, வாள், பொற்கிண்ணம் ஏந்தி சிவக்கோலம் பூண்டுள்ளாள்.
930 : _ _ |a ஒரு நாள் மாலவன் தன் தங்கையை காண வேற்காடு எழுந்தருளினார். தங்கை அகம் மகிழ்ந்தாள். தங்கைக்கு சீர் செய்ய வேண்டாமா? தனது எழில் வடிவையே சீதனமாகத் தந்தான் நாராயணன். அன்னையின் சன்னதியிலே ஏழுமலையானாக கோயில் கொண்டான். அன்னைக்கு மட்டுமல்ல அவள் பக்தர்களுக்கும் அவன் சீர் செய்து வருகிறான். அது மட்டுமா? தென்புலப் பெரியோர், நவகோள்களின் தீட்சண்யத்திலிருந்து காத்து அவர்களுக்கு நன்மைகளை மட்டுமே வழங்க நவகோள்களுக்கு ஆணை இடுகிறான். அவனது அருளாட்சி இன்றும் தொடர்கிறது. விடங்கள் தீண்டாத வேற்காட்டின் வரலாறு ஒருமுறை ததீசி என்ற சிவபக்தருக்கும் திருமாலுக்கும் பகை ஏற்பட்டது. கார்மேகவண்ணன் கடுங்கோபம் கொண்டான். கடவுளுக்கும் கோபம். சினத்தீ சிறுமையில் தள்ளும். அதுவும் யார் மேல் கோபம்? சிவத் தொண்டன் மீதா? தொண்டர் தம் பெருமை சொல்லவும் அரிதாயிற்றே! நீலமேகவண்ணன் ததிசீயின் மேல் போர் தொடுத்தான்; பல கணைகளை வீசினான். ததிசீயின் சிவபக்தி காத்தது; கணைகள் வீணாகியது. இறுதியில் சக்கரத்தை எடுத்தான் தாமோதரன். முனிவன் மேல் ஏவினான். சுதர்சனம் ஒளியை கக்கிக் கொண்டு ஓடியது; ததிசீ முனிவன்மேல் மோதியது. ஆயினும் பயமென்ன? சுதர்சனம் வலிமை இழந்தது; கூர் மங்கி சுருண்டு விழுந்தது; தாமரைக் கண்ணன் மனம் தளர்ந்தான்; சுதர்சனமின்றி சோர்வுற்றான்; ஈசனைப் பூசிக்க முனைந்தான். அவன் பூசித்த இடம் திருவேற்காடு. தினந்தோறும் ஆயிரம் மலர்களை எண்ணி வைத்து ஈசனைப் பூசிக்க எண்ணம் கொண்டான். அதன்படி ஆயிரம் தாமரைப் பூக்கள் அன்றாடம் ஈசனின் திருவடிகளை ஆராதித்தன. ஒருநாள் இறைவன் திருமாலை சோதித்தான். சிவன் சோதனைக்கு திருமால் மட்டும் விதிவிலக்கா என்ன? ஆயிரம் மலர்களில் ஒன்று குறைந்தது. பூசை பூரணத்துவம் அடையாது நின்றது. உடனே உணர்ச்சிப் பெருக்குடன் ஒரு காரியம் செய்தான் சியாமள வண்ணன். தனது ஒரு கண்ணைப் பெயர்த்தான். உதிரம் கொட்டக் கொட்ட ஆண்டவனின் பாதத்தில் சமர்ப்பித்தான். இறைவன் மாலவனின் தியாகத்தை எண்ணி மகிழ்ந்தான்; இழந்த திருச்சக்கரத்தினை மீண்டும் வழங்கினான்; கண்ணை அர்ப்பணித்த கார்முகில் வண்ணனுக்கு கண்ணன் என்ற பெயரும் வழங்கினான். இந்த தியாக வரலாற்றை அருகிருந்து கண்ணுற்றான் ஆதிசேடன். " இந்த மண் புனிதமானது; எனது தலைவனின் இரத்தம் சிந்திய இடம் இது; எனவே இந்த இடத்தில் எங்கள் பாம்பு இனத்தால் யாரும் இரத்தம் சிந்தக் கூடாது" என சங்கல்பம் செய்தான். ஆகையால்தான் இன்றுவரை இங்கே எந்த உயிரையும் அரவம் தீண்டியதாக வரலாறு இல்லை. சாம்பலால் அருளாட்சி புரியும் சக்தி கருமாரி அவுணர்களை சாய்க்க ஆண்டவன் புறப்பட்டான். ஐந்தொழிலை அன்னை ஏற்றாள். ஐயனின் யாக்கையிலிருந்து சாம்பல் பெற்றாள். அண்டி வந்தவர்களுக்கு திருச்சாம்பல் நல்கி அணைத்துக்கொண்டாள். வைகறைப் பொழுதில் ஒரு நாள்! அன்னையைக் கண்டான் முருகன்; பணிந்தான்; முருகனின் பேரழகில் மயங்கிய தாய் அவனைக் கொஞ்சி மகிழ்ந்தாள். குழந்தையை மேலும் மகிழ்விக்க எண்ணினாள். தாய் தன் குழந்தையை மகிழ்விக்க பொம்மையைக் கொண்டு வேடிக்கை காட்டுவது வழக்கம். இங்கே தாயே பொம்மையானாள்; பொம்மை என்றால் உயிருள்ள பொம்மை; நாக பொம்மை. படமெடுத்து கருநாகமாக ஆடினாள். குழந்தை முருகன் கை தட்டிச் சிரித்தான். அன்னையின் காட்சி! கிடைத்தற்கரியக் காட்சி. பின்னர் சுய உருப்பெற்ற அன்னை முருகனுக்கும், தேவர், முனிவர்களுக்கும் திருநீற்றை வழங்கினாள். மகிழ்வோடு பணிந்து அதைப் பெற்றுக்கொண்ட குமரவேல், “தாயே ! முன்பு சூரனை மாய்க்க வேல் வழங்கினீர். நான் அந்த மகிழ்ச்சியில் நீராட வேலாயுத தீர்த்தம் அமைத்திட்டேன். இப்போது திருநீறு வழங்கி உள்ளீர். அந்த திருநீற்றின் பெயரால் இப்போதும் ஒரு பொய்கை அமைக்கிறேன். இந்தத் திருநீற்றுப் பொய்கையை ஏற்றருள வேண்டும்" என்று வேண்டினான். “மைந்த கேள்! இந்த திருநீற்றுப் பொய்கையில் ஞாயிற்றுக்கிழமை அன்று விடியற்காலையில் நீராடி, திருநீறு அணிபவர்கள் சகல செல்வங்களும் பெறுவர். அத்துடன் கல்வி அறிவும் நிரம்பப்பெற்று உலகம் போற்ற வாழ்வர். ஆடி மாதத்தில் ஆதி வாரத்தில் நீராடுவோர் மக்கட்பேறு பெற்று மகிழ்வர். மாசி அமாவாசையில் நீராடி நீறு பூசிக்கொள்வோர் பகைவர்களை எளிதில் வென்று வெற்றி அடைவர். தை மாதத்தில் ஞாயிறன்று நீராடுவோரின் வல்வினைகள் பொடிப்பொடியாகி புனிதமடைவர். அமாவாசையில் நீராடினால் பிணி நீங்கும். பில்லி, ஏவல் போன்ற செய்வினைகள் ஒழியும். முழுமதியில் நீராடுவோர் பல நதிகளில் நீராடிய பலன் பெற்றுப் பாவங்கள் நீங்கி சுகம் பெறுவர். தைமாதம், ஆதிவாரம் கூடிய நன்னாளில் நீராடினால் பெறற்கரிய பேறுகளைப் பெறலாம். ஆடிப்பூரம் - நாவன்மை சிறக்கும்; கலைகள் விளங்கும்; சித்திரைத்திங்கள் பௌர்ணமி நாள் - பூரண ஞானம்; புரட்டாசி , ஐப்பசி முழுமதி நாட்கள் - ஞானி ஆவர்; அனைத்து சித்திகளும் கைகூடும்; நவராத்திரி - ஆதிசேடனை போன்ற கலைத்திறன் கைகூடும்; பாவம் தொலையும்" என்று அன்னை கூறி அகிலத்திற்கு அருள் பாலித்தாள். விநாயகருக்கு அருள்புரிந்த வேற்காடு மாரி முருகப்பெருமான் அன்னையை வணங்கி, திருநீறு பெற்று, பொய்கை அமைத்தான். இப்போது விநாயகர் அன்னையை பணிந்தேத்திய அருள் வரலாறு; விநாயகர் ஞானமே வடிவானவர். அவர் அன்னையின் கருத்தைக் கவர, வலம்புரி சங்கெடுத்து நீர் முகந்து அன்னைக்கு அபிடேகம் செய்தார் . அவருக்கும் கருநாகக் காட்சி கிடைத்தது. அது மட்டுமா? " விநாயக மூர்த்தி! வலம்புரி சங்கெடுத்து நீருற்றி வலம் வந்து வணங்கினாய். இனி நீ வலம்புரி விநாயகன் என்ற பெயர் பெறுவாய்! எனது சன்னதியில் முதல் பூசை உனக்குதான்" என்று வாழ்த்தி அருளினாள் அன்னை வேற்கண்ணி. வீரபத்திரர் வணங்கிய வேற்காடு தாய் தட்சனின் ஆணவத்தை அழிக்கப் பிறந்தவர் வீரபத்திரர். அவரது இலட்சியம் நிறைவேறியது. தட்சனின் ஆணவம் அழிந்தது. அந்த மகிழ்ச்சியில் உலகை வலம் வந்தார். திருவேற்காட்டில் கருமாரி அன்னையை கண்டு வணங்கினார். கரிய நீறு வழங்கி காத்து இரட்சித்தாள் கருமாரி. அருள்பெற்று மகிழ்ந்தார் வீரபத்திரர். சந்திரன் பணிந்த வேற்கண்ணி தக்ஷனின் சாபத்தால் வளர்பிறை, தேய்பிறை என நிலைமாற்றம் அடைந்தான் சந்திரன். அவன் சிவபெருமானின் சடைமுடியை அலங்கரிக்கும் பேறு பெற்றான். அன்னையின் திருவருளைப் பெற அன்னையை மனமுருகப் போற்றினான். அதன் பலனாக அன்னையை சிவலிங்கத்தோடு நின்று அவனைத் தாங்கும் அரிய காட்சியைக் கண்டு உளம் கனிந்து, அன்னையும் சிவமும் ஒன்று கலந்ததே ஆதிசக்தியின் பரிணாமம் என்பதையும் அறிந்தான். சனி பகவான் வணங்கிய கருமாரி அன்னை சனி பகவான் சூரியனுக்கும் சாயா என்ற நிழலுக்கும் பிறந்தவன். கரிய நிறத்தவன். அவன் பாலி நதியில் நீராடி திருவேற்காடு கருமாரியைப் பணிந்தான். திருநீறு பெற்று மகிழ்ந்தான். அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் சனீஸ்வரர் சன்னதி உள்ளது. புதன் பகவான் போற்றிய வேற்காடு கருமாரி நவக்கிரகங்களில் ஒன்றாகிய புதன் கலைகளுக்குரியவன். அவன் கலைப்பீடத்தை அலங்கரித்த ஆதி நாயகி வேற்காடு அன்னையைப் பணிந்து அருள் பெற்றான். சுக்கிரன் பணிந்த அன்னை அசுரர்களின் குரு சுக்கிரன். அவன் மூவுலகிலும் மூப்பின்றி வாழ வழி தேடினான். கலைமகளைப் பணிந்து அதற்குரிய வழியைக் கேட்டான். அவளோ திருவேற்காட்டை நோக்கி திருக்கரம் நீட்டினாள். அன்னையைப் பணிந்தான் சுக்கிரன். அன்னை அவனுக்கு வழி காட்டினாள். சிரஞ்சீவி மந்திரத்தை கற்க வேண்டும் என்றால் எப்படிக் கற்பது? அன்னை அதற்கும் விடையிறுத்தாள். ஐந்தீ வளர்த்து, அதன் நடுவே திருநீறு அணிந்தவாறு தினமும் மூன்று வேளை ஆயிரத்தெட்டு மலர்களால், ஆயிரத்தெட்டு திருநாமத்தினை ஓத வேண்டும். இப்படி ஆயிரத்தெட்டுமுறை செய்தால் அந்த மந்திரம் சித்திக்கும். அதன்படி நடந்து சஞ்சீவி மந்திரத்தைக் கற்றான் சுக்கிரன். அங்காரகன் பணிந்த அன்னை அங்காரகன் ஒருசமயம் ஆணவங்கொண்டு அலைந்தான். அவனை அழிக்க, தேவர்கள் விஸ்வாமித்திரரின் ஆலோசனைப்படி யாகம் ஒன்று நடத்தினர். அந்த யாகத்திலிருந்து பூதம் ஒன்று வெளிப்பட்டு அங்காரகனை அழிக்கப் புறப்பட்டது. அந்த பூதத்திற்கு அஞ்சிய அங்காரகன் திருவேற்காடு கருமாரி அன்னையை சரணடைந்தான். அன்னை அவனுக்கு திருநீறு தந்து பூதத்திடமிருந்துக் காத்து, அந்த பூதத்தையே அவனுக்கு அடிமையாக்கினாள். குரு பகவான் பணிந்த அன்னை குரு பகவான் அன்னையின் திருப்புகழை உணர்ந்து, வேற்காட்டை அடைந்து அன்னையை வணங்கினான். அவனுக்கு காட்சியளித்து திருநீறு வழங்கிய தாய் அவனுக்கு அருட்பார்வை வழங்கினாள். அன்றிலிருந்து அந்த குருபார்வை கோடி நன்மையாக உலகில் விளங்கி வருகிறது. ராகுவும் கேதுவும் பணிந்த அன்னை பண்டைக் காலத்தில் தேவரும் அசுரரும் பாற்கடலைக் கடைந்தனர். அமுதம் வந்தது. அமுதத்தை எடுத்துக் கொண்டு வந்து தேவர்களுக்கு அளித்த திருமால் அசுரரை வஞ்சித்து, ஏமாற்றினான். ஆயினும் ஒரு அசுரன் அமுதத்தை ருசித்துவிட்டான். அவன் மீது கோபம் கொண்ட மாலவன் அமுதக் கரண்டியால் அடிக்க, அசுரன் இரு துண்டுகளாகி விழுந்தான். அந்த இரு துண்டுகளும் அமுத சம்பந்தத்தால் உயிருடன் இருந்தன. அவையிரண்டும் நைமிசாரண்ய வனமடைந்து கருமாரியைப் பணிந்தன. இரண்டு மாங்கனிகள் ஈந்து, அவர்களை முழு வடிவாக்கினாள் அன்னை. ஒன்று பாம்பு தலையும், அரக்க உடலுமாக “ராகு“ எனப் பெயர் பெற்றது. மற்றொன்று அரக்கத்தலையுடன் பாம்பு உடலுடன் “கேது“ எனப் பெயர் பெற்றது. அவ்விருவரையும் நவக்கிரங்களில் இரண்டு கிரகங்களாக நியமித்து அருள்புரிந்தாள் அன்னை. ஆதவனுக்கு அருளிய அன்னை பஞ்சபூதங்கள் அருள் பெற்றன அன்னையிடம்; தேவர்கள் அருள் பெற்றனர்; நரகர்கள் அருள் பெற்றனர்; மனிதர், தேவர், முனிவர் என அனைவரும் அருள்பெற்றனர்; இந்த வரிசையில் ஆதவனும் அருள் பெறத் துடித்தான். அன்னையை திணைப்பொழுதும் மறவாது துதித்தான். அவனுக்கு அருள் செய்ய நினைத்தாள் கருமாரி. பரமேஸ்வரன் தனது பக்தர்களுக்கு அருள் வழங்கும் முன்னால் சோதித்து பார்ப்பது வழக்கம். ஆனால் அன்னை அப்படியல்ல. "தாயே " என்று கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வருபவள் அவள். ஆனால் கதிரவனை மட்டும் சோதிக்க விரும்பினாள். ஒரு நாள் குறத்தியாக மாறி அதிகாலை நேரத்தில் சூரியனை வழி மறித்தாள். ஒரு குறத்தியின் மறியலுக்குத் தேர் நின்றது . அதைக் கண்டு அதிசயித்தான் சூரியனின் தேர்ப்பாகன் அருணன்.
932 : _ _ |a இங்கு சீனிவாசப் பெருமாள் சன்னதி, சப்தமாதாக்கள், பிரத்யங்கரா சன்னதி, துர்க்கை சன்னதி, புற்றடி போன்ற பல சுற்றுச் சன்னதிகள் உள்ளன.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a திருவேற்காடு வேதபுரீசுவரர் கோயில், திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோயில், திருமழிசை ஆழ்வார் கோயில்
935 : _ _ |a சென்னையிலிருந்து பூவிருந்தவல்லி செல்லும் பெருவழிச் சாலையில் சுமார் 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
936 : _ _ |a காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
937 : _ _ |a திருவேற்காடு
938 : _ _ |a ஆவடி
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a சென்னை நகர விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000231
barcode : TVA_TEM_000231
book category : சைவம்
cover images TVA_TEM_000231/TVA_TEM_000231_திருவேற்காடு_கருமாரியம்மன்-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000231/TVA_TEM_000231_திருவேற்காடு_கருமாரியம்மன்-கோயில்-0003.jpg

TVA_TEM_000231/TVA_TEM_000231_திருவேற்காடு_கருமாரியம்மன்-கோயில்-0001.jpg

TVA_TEM_000231/TVA_TEM_000231_திருவேற்காடு_கருமாரியம்மன்-கோயில்-0002.jpg